Publish Date: Sat, 24 May 2008 (15:29 IST)
Updated Date: Sat, 24 May 2008 (15:28 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை அதிகரித்தது. ஆனால் தங்கத்தின் விலை சிறிது குறைந்தது.
இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.125 அதிகரித்தது. தொழில் துறையினர் அதிக அளவு வெள்ளி வாங்கியதால், விலை உயர்வதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 குறைந்தது.
லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 925.50/ 926.10 ஆக இருந்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 18.21/ 18.26 டாலராக இருந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,855
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,800
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,105