மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து குறைந்த குறியீட்டு எண்கள், நண்பகல் 12.30 மணியளவில் அதிகரிக்க துவங்கின.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 12.98 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 17,243.16 ஆக முடிந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தம் தொடங்கும் போது, பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்திருந்தன. ஆனால் இறுதியில் ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அதே நேரத்தில் தென்கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன.
இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு, தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் சிலவற்றில் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன.
பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ 19 புள்ளி அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 12.70 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 5117.65 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,710 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,009 பங்குகளின் விலை குறைந்தது, 76 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 41.99, பி.எஸ்.இ. 500- 25.41, சுமால் கேப் 130.37 புள்ளி அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 7.60, சி.என்.எக்ஸ்.100- 11.10, சி.என்.எக்ஸ். டிப்டி 04, சி.என்.எக்ஸ். 500- 15.70, சி.என்.எக்ஸ். மிட் கேப் 53.20, மிட் கேப் 50- 40 புள்ளி அதிகரித்தது. ஆனால் பாங்க் நிஃப்டி 84.95, சி.என்.எக்ஸ். ஐ.டி 3.60 புள்ளி குறைந்தது.
நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,233.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,553.85 மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.991.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.991.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.40,638.15 மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.79%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 2.36%, ரியல் எஸ்டேட் 0.14%, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 0.98%, வாகன உற்பத்தி பிரிவு 0.40%, உலோக உற்பத்தி பிரிவு 1.24% அதிகரித்தது.
மின் உற்பத்தி பிரிவு 0.06%, வங்கி பிரிவு 1.41%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.31% குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 27 பங்குகளின் விலை அதிகரித்தது. 23 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 28 பங்குகளின் விலை அதிகரித்தது. 22 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 8 பங்குகளின் விலை அதிகரித்தது. 12 பங்குகளின் விலை குறைந்தது.
பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 5 பங்குகளின் விலை அதிகரித்தது. 7 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 33 பங்குகளின் விலை அதிகரித்தது. 15 பங்குகளின் விலை குறைந்தது. 2 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை.