Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் சரிவு!

பங்குச் சந்தைகளில் சரிவு!
, புதன், 21 மே 2008 (11:10 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. மும்பை பங்குச் சந்தையில் சுமால் கேப் உயர்ந்து இருந்தது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால், பங்குச் சந்தையில் பாதகமான போக்கு நிலவுவதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர். இன்று வர்த்தகம் தொடங்கும் போது வங்கி, ரியல் எஸ்டேட் பிரிவு பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன.

காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 114 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,116.55 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 36 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,069.45 ஆக குறைந்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்து இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 893 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1068 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 61 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 122.11 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 17,108.07 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 33.50 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5071.45 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 22.19, பி.எஸ்.இ. 500- 34.97 புள்ளிகள் குறைந்தன. சுமால் கேப் 7.96 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,233.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,553.85 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.320.50 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.991.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.991.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.0.39 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 199.48, நாஸ்டாக் 23.83 புள்ளி குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 184.90 புள்ளி குறைந்தது.

ஹாங்காங்கின் ஹாங்செங் 170.57, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 24.79, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 300.85, தென் கொரியாவினசியோலகாம்போசிட் 21.87, சீனாவின் சாங்காய் காம்போசிட் 64.33 புள்ளி குறைந்து இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil