Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 205 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 205 புள்ளிகள் சரிவு!
, செவ்வாய், 20 மே 2008 (17:39 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் தொடர்ந்து குறைந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 204.75 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,230.18 ஆக முடிந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தம் தொடங்கும் போது, எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன. கடைசி வரை எவ்வித மாற்றமும் நிகழாமல், இறுதியில் குறியீட்டு எண்கள் குறைந்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு, தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் இன்று பாதகமான நிலையே இருந்தது. பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ 90.90 புள்ளி குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 52.75 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 5104.95 ஆக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,431 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,292 பங்குகளின் விலை குறைந்தது, 66 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 23.64, பி.எஸ்.இ. 500- 49.48 புள்ளி குறைந்தது. ஆனால் சுமால் கேப் 38.35 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 127.20, பாங்க் நிஃப்டி 185.40, சி.என்.எக்ஸ்.100- 53.55, சி.என்.எக்ஸ். டிப்டி 39.40, சி.என்.எக்ஸ். 500- 39.20, சி.என்.எக்ஸ். மிட் கேப் 49.15, மிட் கேப் 50- 17.85, சி.என்.எக்ஸ். ஐ.டி 38.85 புள்ளி குறைந்தது.

வெள்ளிக்கிழமை இரண்டு பங்குச் சந்தைகளிலுமநடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,867.15 மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,391.28 மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,082.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.690.06 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.40,317.64 மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.97%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 1.06%, மின் உற்பத்தி பிரிவு 0.83%, ரியல் எஸ்டேட் 1.87%, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 1.82%, வங்கி பிரிவு 1.98%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.01% குறைந்தன.

வாகன உற்பத்தி பிரிவு 0.13%, உலோக உற்பத்தி பிரிவு 0.70% அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 12 பங்குகளின் விலை அதிகரித்தது. 38 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 22 பங்குகளின் விலை அதிகரித்தது. 28 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 7 பங்குகளின் விலை அதிகரித்தது. 13 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், எல்லா பங்குகளின் விலையும் குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 21 பங்குகளின் விலை அதிகரித்தது. 28 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் மாற்றம் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil