மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.270ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.235 அதிகரித்தது.
அதே நேரத்தில் அயல் நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை அதிகரித்தது.
ஜப்பானினல் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின்படி, இதன் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிக அளவு உள்ளது. இதனால் ஜப்பான் நாணயமான யென்னுக்கு நிகரான டாலரின் மதிப்பு சிறிது குறைந்தது. இத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சிறிது குறைநததாலும், தங்கத்தின் விலை குறைநதது.
நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 880.55/881.50 டாலராக இருந்தது. புதன்கிழமை விலை 881.55/882.75 டாலர். 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 16.75/16.80. புதன் கிழமை விலை 16.7016.76 டாலர்.
இன்று விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,200
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,150
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,740