Newsworld Finance Market 0805 16 1080516008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, வெள்ளி, 16 மே 2008 (11:10 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா பிரிவு குறியீட்டு எண்களிலும் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 138 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,491.65 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 36 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5150.95 ஆக அதிகரித்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென்கொரியா, சீனா தவிர மற்ற பங்குச் சந்தைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. அத்துடன் நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

இருப்பினும் இன்று இந்த வாரத்தின் கடைசி நாள். அத்துடன் திங்கட்கிழமை பங்குச் சந்தைக்கு விடுமுறை. முதலீட்டு நிறுவனங்கள் இன்று இலாபக கணக்கை பார்க்க தொடங்குவார்கள். அத்துடன் இன்று பணவீக்கம பற்றிய புள்ளி விபரம் நண்பகலில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். இதனை பொறுத்தும் பங்குச் சந்தையின் போக்கில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே இன்று பங்குச் சந்தையில் அதிகளவு ஏற்ற இறக்கம் இருக்கும் என கருதப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 1,195 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 748 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 56 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 8.85 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17, 362.39 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையினநிஃப்டி 5.20 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5120.45 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 23.86, சுமால் கேப் 40.73, பி.எஸ்.இ. 500- 24.75 புள்ளிகள் அதிகரித்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,165.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,458.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.706.88 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.462.48 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,099.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.363.11 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 94.28, நாஸ்டாக் 37.03 எஸ் அண்ட் பி-500 14,91 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 35.80 புள்ளி அதிகரித்தது.

இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென்கொரியா, சீனா பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன.

ஹாங்காங்கின் ஹாங்செங் 161.80, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 29.09, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 28.17 புள்ளி அதிகரித்து இருந்தது.

ஆனால் தெனகொரியாவினசியோலகாம்போசிட் 2.39, சீனாவின் சாங்காய் காம்போசிட் 3.25 புள்ளி குறைந்து இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil