மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.145ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.10 குறைந்தது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து, டோக்கியோ சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தது.
நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 864.10/865.10 டாலராக இருந்தது. புதன்கிழமை விலை 865.05/866.25டாலர். 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 16.55/16.61 . புதன் கிழமை விலை 16.63/16.65 டாலர்.
இன்று விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,940
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,880
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,410