Newsworld Finance Market 0805 15 1080515013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் உயர்வு!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, வியாழன், 15 மே 2008 (11:28 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 160 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,138.62 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 45 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5056.25 ஆக அதிகரித்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. அத்துடன் நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. இதனால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர். நண்பகலுக்கு பிறகு இலாப கணக்கு பார்க்க தொடங்கினால், குறியீட்டு எண்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அதிக அளவு குறைய வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 1,594 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 606 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 63 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 245.65 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,223.65 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையினநிஃப்டி 66.95 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5011.75 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 74.92, சுமால் கேப் 74.92, பி.எஸ்.இ. 500- 88.57 புள்ளிகள் அதிகரித்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,623.16, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,538.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.85.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.109.49 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.899.08 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.310.41 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 66.20, நாஸ்டாக் 1.58 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 4.10 புள்ளி அதிகரித்தது.

இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 42.72, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 18.31, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 225.63, சீனாவின் சாங்காய் காம்போசிட் 20.99 புள்ளி அதிகரித்து இருந்தது.

ஆனால் ஹாங்காங்கினஹாங்செங் 132.15 புள்ளி குறைந்து இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil