Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
, புதன், 14 மே 2008 (11:21 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் குறைந்தன.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,733.39 ஆக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4953.10 ஆக இருந்தது.

நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் நண்பகலுக்கு பிறகு தொடர்ந்து சரிந்தது.

இன்று காலையில் பாதிப்பு இருந்தாலும், வர்த்தகம் தொடங்கிய பிறகு பங்கு விலைகள் அதிக அளவு ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் முன்னேற்றம் காணப்படுவதால், இந்திய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது ( 10.05 மணி நிலவரப்படி) மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 121 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,981.65 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26 புள்ளி உயர்ந்து குறியீட்டு எண் 5,038.85 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1,071 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 957 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 76 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 16.83 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,769.69 ஆக இருந்தது.

ஆனால் தேசிய பங்குசசந்தையினநிஃப்டி 2.95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,954.85 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 22.44, சுமால் கேப் 31.60, பி.எஸ்.இ. 500- 15.57 புள்ளிகள் அதிகரித்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,990.62 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,916.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.73.93 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,363.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,1096.62 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.266.50 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 44.13 புள்ளிகள் குறைந்தது. ஆனால் நாஸ்டாக் 6.63 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 8,70 புள்ளி குறைந்தது.

இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இரண்டு விதமான போக்கு நிலவியது.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 6.11, ஹாங்காங்கினஹாங்செங் 358.64, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 16.42 புள்ளி குறைந்து இருந்தது.

ஆனால் ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 23.67, சீனாவின் சாங்காய் காம்போசிட் 162.29 புள்ளி அதிகரித்து இருந்தது.

இன்று பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவு பங்கு விலைகளிலும் அடிக்கடி மாற்றம் இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil