Publish Date: Tue, 13 May 2008 (15:30 IST)
Updated Date: Tue, 13 May 2008 (15:29 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.470 அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.5 அதிகரித்தது.
இன்று தொழில் துறையின்ர் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் காண்பித்த காரணத்தால் விலை அத்கரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், நேற்று நியுயார்க் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை அதிகரித்தது.
நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 883.50/884.20 டாலராக குறைந்தது. திங்கட் கிழமை விலை 884.60/886.00டாலர். 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 17.17/17.23. திங்கட் கிழமை விலை 17.12/11.18 டாலர்.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,060
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,000
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,885
Webdunia
Publish Date: Tue, 13 May 2008 (15:30 IST)
Updated Date: Tue, 13 May 2008 (15:29 IST)