Newsworld Finance Market 0805 13 1080513010_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் உயர்வு!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, செவ்வாய், 13 மே 2008 (10:59 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த குறியீட்டு எண்கள், இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று காலையில் குறைந்தது. ஆனால் மதியத்திற்கு பிறகு முன்னேற்றம் அடைந்தது. இறுதியில் இரண்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை நேற்று சிறிது குறைந்தது. அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனாவின் இறக்குமதி குறைந்ததே, இதன் விலை குறைந்ததற்கு காரணம் என்று தெரிகிறது.

அத்துடன் நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இரு‌ந்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் முன்னேற்றம் காணப்படுவதால், இந்திய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது ( 10.05 மணி நிலவரப்படி) மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 121 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,981.65 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26 புள்ளி உயர்ந்து குறியீட்டு எண் 5,038.85 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1,592 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 447 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 53 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 162.83 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,023.73 ஆக இருந்தது.

அதே போல் தேசிய பங்குசசந்தையினநிஃப்டி 37.75 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5050.40 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 125.64, சுமால் கேப் 148.33, பி.எஸ்.இ. 500- 87.72 புள்ளிகள் அதிகரித்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,322.01 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,532.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.210.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.909.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.668.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.241.01 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 130.43, நாஸ்டாக் 42.97, எஸ் அண்ட் பி 500- 15.30 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சுவிட்சர்லாந்து தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகத்தில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இன்று காலை ஆசிய நாட்டு பங்குசசந்தைகளிலும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 10.88, ஹாங்காங்கினஹாங்செங் 174.08, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 18.14, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 228.71 புள்ளி அதிகரித்தது. சீனாவின் சாங்காய் காம்போசிட் மட்டும் 202.92 புள்ளி குறைந்து இருந்தது.

இன்று பங்குச் சந்தையில் உயர்வு இருந்தாலும் பங்குகளின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மதியத்திற்கு பிறகு நிலைமை மாறவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil