Newsworld Finance Market 0805 09 1080509050_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

Advertiesment
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்
, வெள்ளி, 9 மே 2008 (17:55 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் திங்கட் கிழமையில் இருந்து தொடர்ந்து குறியீட்டு எணகள் சரிந்தன.

இந்த வாரம் முழுவதும் சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தையில், இன்று சென்செக்ஸ் 17 ஆ‌யிர‌த்‌தி‌ற்கும் குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 ஆயிரம் என்ற அளவில் இருந்து குறைந்தது.

காலையில் பங்குச் சந்தை ஆரம்பித்த போதே, சென்செக்ஸ் 17, 000 க்கும் கீழே இறங்கியது. சில நிமிடங்களில் முன்னேறியதால், வர்த்தகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் தொடர்ந்து எல்லா பிரிவு பங்குகளின் விலைகளிலும் மாற்றம் இருந்தது. நண்பகல் 12 மணியளவில் இரண்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைய துவங்கின.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும், ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 285.67 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,794.98 ஆக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 117.65, சுமால் கேப் 125.83, பி.எஸ்.இ. 500- 129.31 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 99.10 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,982.60 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 303.65, சி.என்.எக்ஸ். ஐ.டி 73.00, பாங்க் நிஃப்டி 219.80, சி.என்.எக்ஸ்.100- 105.70, சி.என்.எக்ஸ். டிப்டி 72.60, சி.என்.எக்ஸ். மிட் கேப் 176.70, சி.என்.எக்ஸ். 500- 88.20, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50- 94 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 704 பங்குகளின் விலை அதிகரித்தது, 2,019 பங்குகளின் விலை குறைந்தது, 61 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,529.43 கோடி மதிப்பள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,253.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,344.41 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.734.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.40,829.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.28,350.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வங்கி பிரிவு 2.78%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.99%, மின் உற்பத்தி பிரிவு 1.99%, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 2.03%, ரியல் எஸ்டேட் 2.95%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 4.71%, வாகன உற்பத்தி பிரிவு 0.90%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.38%, உலோக உற்பத்தி பிரிவு 1.47% குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil