மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் சரிந்தன. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 17 ஆயிரத்திற்கும் குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது ( 10.05 மணி நிலவரப்படி) மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,011.01 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 15 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 5,066.60 ஆக குறைந்தது.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தது.
மும்பை சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது தகவல் தொழில் நுட்பம், வங்கி பிரிவு குறியீட்டு எண்கள் அதிக அளவு குறைந்தன.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 8.48 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 17,089.13 ஆக இருந்தது.
ஆனால் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 7.85 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,073.85 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 9.17, சுமால் கேப் 46.74, பி.எஸ்.இ. 500- 1.22 புள்ளி அதிகரித்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் 1172 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,030 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 67 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,529.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,253.92 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.724.49 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,344.41 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.734.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.609.51 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இன்று வாரத்தின் இறுதி நாள் ஆகையால், முதலீட்டு நிறுவனங்கள் இலாப கணக்கு பார்ப்பது தொடரும். எனவே இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஐரோப்பிய பங்குச் சந்தையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து, இந்திய பங்குச் சந்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 52.438, எஸ் அண்ட் பி 500 5.11, நாஸ்டாக் 12.75 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தது.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 26.12, ஹாங்காங்கின் ஹாங்செங் 411.73, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 9.81 ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 249.30, சீனாவின் சாங்காய் காம்போசிட் 195.87 புள்ளி குறைந்தது.