Newsworld Finance Market 0805 08 1080508050_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் இன்று 259 புள்ளிகள் சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் சரிவு!
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் நான்காவது நாளாக இன்றும் குறியீட்டு எணகள் சரிந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, சிறிதளவு கூட முன்னேற்றம் இல்லாமல் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

இறுதியில் சென்செக்ஸ் 258.66 புள்ளிகளும், நிஃப்டி 53.80 புள்ளிகளும் குறைந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில், சீனா தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன. நேற்று அமெரிக்க பங்குச் சந்தையிலும் இறங்குமுகமாக இருந்தது.

இந்திய பங்குச் சந்தை துவங்கிய பிறகு, வர்த்கம் தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 258.66 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,080.66 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 48.14, சுமால் கேப் 38.13, பி.எஸ்.இ. 500- 84.15 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 53.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,081.70 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 205.35, சி.என்.எக்ஸ். மிட் கேப் 65.85, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50- 24.40, பாங்க் நிஃப்டி 224.80, சி.என்.எக்ஸ்.100- 59.75, சி.என்.எக்ஸ். டிப்டி 81.85, சி.என்.எக்ஸ். 500- 46.30 சி.என்.எக்ஸ். ஐ.டி 87.60 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,102 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,593 பங்குகளின் விலை குறைந்தது, 51 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி பிரிவு 2.90%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.95%, மின் உற்பத்தி பிரிவு 0.93%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.63%, ரியல் எஸ்டேட் 0.94%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.81%, வாகன உற்பத்தி பிரிவு 0.421%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.69% குறைந்தது.

உலோக உற்பத்தி பிரிவு மட்டும் 0.19% அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil