Newsworld Finance Market 0805 08 1080508012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் சரிவு!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது ( 10.05 மணி நிலவரப்படி) மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 190 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,149.61 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 47 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 5,85.90 ஆக குறைந்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சீனாவை தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தது.

மும்பை சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம், மிட் கேப் தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 229.98 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 17,099.33 ஆக குறைந்தது.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 60.25 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,75.25 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 75.21, சுமால் கேப் 83.01, பி.எஸ்.இ. 500- 91.27 புள்ளி குறைந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 629 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,512 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 54 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,387.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,299.62 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.88.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,039.31 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.804.48 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.234.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 206.48, எஸ் அண்ட் பி 500 26.69, நாஸ்டாக் 44.82 புள்ளிகள் குறைந்தன. நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்தது.

இன்று காலை ஆசிய நாட்டபங்குசசந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தது.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 8.12, ஹாங்காங்கினஹாங்செங் 185.31, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 73.08, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 130.80 புள்ளிகள் குறைந்தன.

அதே நேரத்தில் சீனாவின் சாங்காய் காம்போசிட் 106.34 புள்ளி அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil