Newsworld Finance Market 0805 07 1080507049_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவு!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, புதன், 7 மே 2008 (17:49 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து குறைந்து வந்த குறியீட்டு எண்கள், இறுதியில் சிறிது முன்னேறின.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எணகளும் (தேசிய பங்குச் சந்தையில் ஐ.டி. பிரிவு தவிர குறைந்தன..

இறுதியில் சென்செக்ஸ் 33.70 புள்ளிகளும், நிஃப்டி 9.15 புள்ளிகளும் குறைந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் ஹாங்காங், சீனா தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் உயர்ந்தன. நேற்று அமெரிக்க பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தை துவங்கிய பிறகு, வர்த்கம் தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது.

இதனால்தான் காலையில் இருந்து அதிக அளவு இறங்குமுகமாக இருந்த இந்திய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் மதியம் 2 மணிக்கு பிறகு அதிகரிக்க துவங்கியது. இறுதியில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக அளவு குறையாமல் சிறிது முன்னேறியது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 33.70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,339.31 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 28.74, சுமால் கேப் 22.07, பி.எஸ்.இ. 500- 18.97 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 9.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,135.50 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 97.25, சி.என்.எக்ஸ். மிட் கேப் 17.50, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50- 14.25, பாங்க் நிஃப்டி 70.95, சி.என்.எக்ஸ்.100- 15.15, சி.என்.எக்ஸ் .டிப்டி 51.95, சி.என்.எக்ஸ். 500- 18.90 புள்ளிகள் குறைந்தன. சி.என்.எக்ஸ். ஐ.டி மட்டும் 54.70 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,163 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,538 பங்குகளின் விலை குறைந்தது, 64 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி பிரிவு 0.79%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 2.24%, மின் உற்பத்தி பிரிவு 0.63%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.65%, ரியல் எஸ்டேட் 1.55%, உலோக உற்பத்தி பிரிவு 0.0.64% குறைந்தது.

பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.0.68%, வாகன உற்பத்தி பிரிவு 0.31%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.68%, அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil