Newsworld Finance Market 0805 07 1080507037_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி, தங்கம் விலை உயர்வு!

Advertiesment
மும்பை வெள்ளி தங்க‌ம் நியுயார்க் சந்தை இந்தியா
, புதன், 7 மே 2008 (16:07 IST)
மும்பையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வெள்ளி, தங்கத்தின் விலை அதிகரித்தது.

மும்பையில் பார் வெள்ளியின் விலை கிலோ ரூ.23 ஆயிரத்தை தாண்டியது.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.90ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.65ம் அதிகரித்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், நியுயார்க் சந்தையிலும் சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

சிங்கப்பூரில் இருந்து வரும் தகவலின்படி, நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 878.00/879.00 டாலராக அதிகரித்து. திங்கட்கிழமை இறுதி விலை 877.40/878.60 டாலர்.

அதே போல் வெள்ளியின் 1 அவுன்ஸ் 16.86/16.91 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 16.84/16.91.


இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,725
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,665
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,045

Share this Story:

Follow Webdunia tamil