மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, நேற்று மாதிரியே குறியீட்டு எண்கள் சரிந்தன.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 63 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,309.95 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 21 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 5,123.40 ஆக குறைந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தது.
மும்பை சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம், மிட் கேப் தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 73.50 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 17,299.51 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 16.40 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,128.25 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 16.46, சுமால் கேப் 32.44, புள்ளிகள் அதிகரித்து இருந்தது. பி.எஸ்.இ. 500- 14.24 புள்ளி குறைந்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் 1,034 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 881 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 60 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,079.65 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,895.26 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.815.61 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,177.86 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.882.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.295.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 51.29, எஸ் அண்ட் பி 500 10.77, நாஸ்டாக் 19.19 புள்ளிகள் அதிகரித்தது. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன.
இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. சிலவற்றில் குறைந்து இருந்து உயர்ந்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 16.64, ஹாங்காங்கின் ஹாங்செங் 553.51, சீனாவின் சாங்காய் காம்போசிட் 126.12, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 0.40.29 புள்ளிகள் குறைந்தன.
அதே நேரத்தில் ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 17.54 புள்ளிகள் அதிகரித்தது.
இன்று ஆசிய நாட்டு தொகுதிக்கான பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை சிங்கப்பூர் சந்தையில் 1 பீப்பாய் 123 டாலராக அதிகரித்தது. இதே போல் நேற்று நியுயார்க் பண்டக சந்தையிலும் பெட்ரோலிய கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை அதிகரித்தது.
இதன் பாதிப்பாக முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து லாப கணக்கு பார்ப்பது தொடர்கிறது. நேற்று போலவே இன்றும் பங்குகளின் விலையில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக குறியீட்டு எண்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.