Newsworld Finance Market 0805 06 1080506055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை
, செவ்வாய், 6 மே 2008 (18:08 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்த குறியீட்டு எண்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல், இறுதி வரை குறைந்தன.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எணகளும் (தேசிய பங்குச் சந்தையில் ஐ.டி. பிரிவு தவிர) குறைந்தன..

இறுதியில் சென்செக்ஸ் 117.89 புள்ளிகளும், நிஃப்டி 47.60 புள்ளிகளும் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தையில் மட்டுமல்லாது, இன்று ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 117.89 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,373.01 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 68.96, சுமால் கேப் 96.11, பி.எஸ்.இ. 500- 65.32 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 47.60 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,144.65 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 178.70, சி.என்.எக்ஸ். மிட் கேப் 99.95, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50- 39, பாங்க் நிஃப்டி 36.95, சி.என்.எக்ஸ்.100- 53.30, சி.என்.எக்ஸ் .டிப்டி 74.95, சி.என்.எக்ஸ். 500- 50.35 புள்ளிகள் குறைந்தன. சி.என்.எக்ஸ். ஐ.டி மட்டும் 47.80 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 965 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,722 பங்குகளின் விலை குறைந்தது, 68 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி பிரிவு 0.46%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.47%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.80%, மின் உற்பத்தி பிரிவு 2.15%, வாகன உற்பத்தி பிரிவு 0.83%, ரியல் எஸ்டேட் 4.63%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.33% குறைந்தது.

ஆனால் உலோக உற்பத்தி பிரிவு 0.18%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.53%, அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil