Newsworld Finance Market 0805 06 1080506034_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி, தங்கம் விலை உயர்வு

Advertiesment
வெள்ளி
, செவ்வாய், 6 மே 2008 (14:44 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.225ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.120ம் அதிகரித்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், லண்டன் உலோக சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

மும்பை சந்தையில் ஆபரண உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பித்ததாலும், அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவலை அடுத்து விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். .

சிங்கப்பூரில் இருந்து வரும் தகவலின்படி, நியுயார்க் சந்தையில் வெள்ளிக் கிழமையன்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 872.05/874.05 டாலராக அதிகரித்து. நேற்றைய இறுதி விலை 871.15/872.55 டாலர்.

அதே போல் வெள்ளியின் விலை 16.71/16.77 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 16.64/16.70.


இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,585
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,520
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,995.

Share this Story:

Follow Webdunia tamil