Newsworld Finance Market 0805 06 1080506016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் சரிவு!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, செவ்வாய், 6 மே 2008 (11:19 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 71.27 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,419.63 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 5,182.95 ஆக குறைந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தது.

மும்பை சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 63.43 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 17,427.47 ஆக இருந்தது.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 12.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,179.60 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 14.42, சுமால் கேப் 6.26 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. பி.எஸ்.இ. 500- 12.24 புள்ளி குறைந்து இருந்தது.

ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே, மிட் கேப், சுமால் கேப் பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 986 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 903 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 55 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,763.17 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,999.98 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.236.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,201.17 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.744.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.457.16 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 88.66, எஸ் அண்ட் பி 500 6.41, நாஸ்டாக் 12.87 புள்ளிகள் குறைந்தது.

இன்று காலை ஆசிநாட்டபங்குசசந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. சிலவற்றில் குறைந்து இருந்து உயர்ந்தன.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 7.06, ஹாங்காங்கினஹாங்செங் 10.76 புள்ளி அதிகரித்தன. இன்று ஜப்பான் பங்குச் சந்தைக்கு விடுமுறை.

ஆனால் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்டடைம்ஸ் 0.85, சீனாவின் சாங்காய் காம்போசிட் 108.50 புள்ளிகள் குறைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil