Newsworld Finance Market 0805 05 1080505036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 109 புள்ளிக‌ள் சரிவு!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, திங்கள், 5 மே 2008 (17:07 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்களில் அடிக்கடி ஏற்ற இறக்கம் இருந்தது. நண்பகல் 1.30 மணியளவில் குறைய துவங்கின.

இறுதியில் சென்செக்ஸ் 109 புள்ளிகளும், நிஃப்டி 36 புள்ளிகளும் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தையில் மட்டுமல்லாது, ஆசியா பங்குச் சந்தைகளிலும் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. இறுதியில் ஹாங்காங் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் குறைந்தது. சிங்கப்பூர் பங்குச் சந்தையில் உயர்ந்த குறியீட்டு எண் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது.

இந்தியாவில் வர்த்தகம் தொடங்கிய பிறகு துவங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 109.22 புள்ளிகள் குறைந்து 17,490.90 புள்ளிகளாக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 61.79, சுமால் கேப் 23.64 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் பி.எஸ்.இ. 500- 8.58 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 35.95 புள்ளி குறைந்து, 5,192.25 புள்ளிகளாக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 72.15, சி.என்.எக்ஸ். மிட் கேப் 52.50, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 5.90 புள்ளி அதிகரித்தது.

ஆனால் சி.என்.எக்ஸ். ஐ.டி.65.95 பாங்க் நிஃப்டி 20.40, சி.என்.எக்ஸ்.100- 24.10, சி.என்.எக்ஸ்.டிப்டி 15.90, சி.என்.எக்ஸ். 500- 12.55, புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,613 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,118 பங்குகளின் விலை குறைந்தது, 45 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி பிரிவு 0.13%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.14%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.24%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.95%, மின் உற்பத்தி பிரிவு 0.42%, வாகன உற்பத்தி பிரிவு 1.01% குறைந்தது.

ஆனால் ரியல் எஸ்டேட் 0.26%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.31% , உலோக உற்பத்தி பிரிவு 0.15% அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil