Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளி விலை உயர்வு

வெள்ளி விலை உயர்வு
, திங்கள், 5 மே 2008 (14:20 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.245ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.55‌ம் அதிகரித்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், லண்டன் உலோக சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

நியுயார்க் சந்தையில் வெள்ளிக் கிழமையன்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 861.10/864.10 டாலராக அதிகரித்து. இதற்கு முந்தைய நாள் விலை 855.80/857.00 டாலர்.

அதே போல் வெள்ளியின் விலை 16.54/16.59 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 16.32/16.38.

மும்பையில் நகை உற்பத்தியாளர்கள் அதிக அளவு தங்கத்தை வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,420
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,360
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,800

Share this Story:

Follow Webdunia tamil