Newsworld Finance Market 0805 05 1080505007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, திங்கள், 5 மே 2008 (11:08 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் உயர்ந்தன. ஆனால் ஐந்தாவது நிமிடத்திலேயே இரண்டு பங்குச் சந்தைகளிலும், எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் ஏற்ற இறக்கமாக இருந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17,590 புள்ளி, தேசிய பங்குச் சந்தையி‌ன் நிஃப்டி 5210 புள்ளிகளாக இருந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் உயர்ந்து இருந்தன. இதே போல் வெள்ளிக் கிழமையன்று, அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 23.23 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,623.35 ஆக இருந்தது.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 4 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5224.00 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 79.79 பி.எஸ்.இ. 500- 28.88, சுமால் கேப் 40.85 புள்ளிகள் அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவு கு‌றியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.

தகவல் தொழில் நுட்பம், வாகன உற்பத்தி பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது.

அதே நேரத்தில் மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தது இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 1,706 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 401 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 27 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

சென்ற வெள்ளிக்கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,662.69 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,004.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.658.34 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,128.90 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,146.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.18.00 மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 48.20, எஸ் அண்ட் பி 500 4.56 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. ஆனால் நாஸ்டாக் 3.72 பு‌‌ள்ளிகள் குறைந்தது.

இன்று காலை ஆசிநாட்டபங்குசசந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 22.80, சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸ் 21.17, சீனாவின் சாங்காய் காம்போசிட் 90.97 , ஜப்பானின் நிக்கி 282.40, ஹாங்காங்கினஹாங்செங் 9.66 புள்ளிகள் அதிகரித்தன.

Share this Story:

Follow Webdunia tamil