Newsworld Finance Market 0805 02 1080502054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 312 புள்ளி உயர்வு!

Advertiesment
தேசிய மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, வெள்ளி, 2 மே 2008 (16:59 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், தொடர்ந்து இறுதி வரை அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தையில் மட்டுமல்லாது, ஆசியா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 312.81 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,600.12 புள்ளிகளாக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 98.73, பி.எஸ்.இ. 500- 105.10, சுமால் கேப் 48.14 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 62.30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5228.20 புள்ளிகளாக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 192.85, பாங்க் நிஃப்டி 242.90, சி.என்.எக்ஸ்.100- 66.55, சி.என்.எக்ஸ்.டிப்டி 36.20, சி.என்.எக்ஸ். 500- 58.30, சி.என்.எக்ஸ். மிட் கேப் 40.15, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 40.15, சி.என்.எக்ஸ். ஐ.டி.100.85 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,400 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,301 பங்குகளின் விலை குறைந்தது, 67 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையினவங்கி பிரிவு 3.66%, ரியல் எஸ்டேட் 2.51%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 1.82%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 2.25%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.27%, தொழில்நுட்ப பிரிவு 1.00%, மின் உற்பத்தி பிரிவு 1.92%, வாகன உற்பத்தி பிரிவு 2.86% பொதுத்துறை நிறுவனங்கள் 1.13% அதிகரித்தன. ஆனால் உலோக உற்பத்தி பிரிவு 1.56% குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil