Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 17 ஆயிரத்தை தாண்டியது!

சென்செக்ஸ் 17 ஆயிரத்தை தாண்டியது!
, வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (17:41 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், மதியம் 2 மணிக்கு பிறகு அதிக அளவு உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

காலையில் இந்திய பங்குச் சந்தை போன்றே, மற்ற ஆசிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

ஆனால் இறுதியில் ஹாங்காங் பங்குச் சந்தையின் ஹாங்செங் 164 புள்ளிகள் குறைந்தது. காலையில் அதிகரித்து இருந்த சிங்கப்பூர் பங்குச் சந்தையின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் குறைந்து, நேற்றைய இறுதி நிலவரத்திற்கே வந்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 25.34, சீனாவின் சாங்காய் காம்போசிட் 25.27 புள்ளிகள் உயர்ந்தன.

இந்திய ப‌ங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று மூன்று பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் 404.90 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,125.98 புள்ளிகளாக உயர்ந்தது.

மிட் கேப் 51.81, பி.எஸ்.இ. 500- 120.94 புள்ளி அதிகரித்தது. ஆனால் சுமால் கேப் 13.29 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 111.85 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5111.70 புள்ளிகளாக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 127.40, சி.என்.எக்ஸ். ஐ.டி.28, பாங்க் நிஃப்டி 224.40, சி.என்.எக்ஸ்.100- 102.40, சி.என்.எக்ஸ்.டிப்டி 96.50, சி.என்.எக்ஸ். 500- 78.95, சி.என்.எக்ஸ். மிட் கேப் 38.50, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 29.80 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,251 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,455 பங்குகளின் விலை குறைந்தது, 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையினவங்கி பிரிவு 3.33%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.73%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.34%, தொழில்நுட்ப பிரிவு 3.16%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.47%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 1.58%, மின் உற்பத்தி பிரிவு 0.90%, உலோக உற்பத்தி பிரிவு 2.41 %, ரியல் எஸ்டேட் 1.40%, வாகன உற்பத்தி பிரிவு 0.71% அதிகரித்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,625.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,384.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 40,154.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.1,358.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 916.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ரூ.26,648.86 கோடி பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil