Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு!
, புதன், 23 ஏப்ரல் 2008 (17:21 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், காலை 10.30 மணியளவில் குறைய துவங்கின. நண்பகல் 1 மணியளவில் அதிகரிக்க துவங்கிய குறியீட்டு எண்கள் மீண்டும் குறைய துவங்கின.

இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு இருந்தாலும், மற்ற ஆசிய பங்குச் சந்தைகளிலும் காலையில் இருந்து குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் 85.83 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,698.04 புள்ளிகளாக குறைந்தது.

ி.எஸ்.இ. 500- 23.78 புள்ளி குறைந்தது. அதே நேரத்தில் சுமால் கேப் 1.78, மிட் கேப் 28.79 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26.50 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,022.80 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 63.60, சி.என்.எக்ஸ்.100- 26.90, சி.என்.எக்ஸ்.டிப்டி. 28.70, சி.என்.எக்ஸ். 500- 15.60, பாங்க் நிஃப்டி 142.85 புள்ளி குறைந்தன.

சி.என்.எக்ஸ். மிட் கேப் 0.75, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 18.30, சி.என்.எக்ஸ். ஐ.டி.43.85 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்கு விலை ரூ.31 குறைந்தது. இத்துடன் டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, சத்யம் கம்ப்யூட்டர்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஹெச்.டி.எப்.சி, பி.ஹெச்.இ.எல், பர்தி ஏர்டெல் ஆகியவற்றின் பங்கு விலைகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,4261 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,297 பங்குகளின் விலை குறைந்தது, 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் வங்கி பிரிவு 1.89%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.55%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.13%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.82%, மின் உற்பத்தி பிரிவு 0.55% குறைந்தன.

உலோக உற்பத்தி பிரிவு 0.12%, ரியல் எஸ்டேட் 1.90%, தொழில்நுட்ப பிரிவு 0.42%, வாகன உற்பத்தி பிரிவு 0.73%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.33% அதிகரித்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,687.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,394.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 38,914.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,048.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 1,1677.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ரூ.26,135.94 கோடி பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil