Newsworld Finance Market 0804 23 1080423006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் சரிவு!

Advertiesment
மும்பை
, புதன், 23 ஏப்ரல் 2008 (12:09 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் சிறிது நேரத்தில், ஏற்ற இறக்கமாக இருந்தது. காலை 10. 30 மணியளவில் இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிய தொடங்கின.

காலை 11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 173.77 புள்ளிகள் சரிந்தன. இதன் குறியீட்டு எண் 16,610.00 ஆக குறைந்தது.

சென்செக்ஸ் 58 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,841.48 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5067.20 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தவிர, மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையிலும் மிட் கேப் தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

ஆசிய பங்குச் சந்தைகளிலும் காலை அதிகரித்த குறியீட்டு எண்கள் 11 மணிக்கு பிறகு குறைய துவங்கின.

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன.

காலை 11.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 23.64 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. ஆனால் பி.எஸ்.இ. 500- 38.91, சுமால் கேப் 26.80 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1098 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1341 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 58 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,687.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,394.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.292.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,048.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,167.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.119.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil