Newsworld Finance Market 0804 21 1080421042_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (18:01 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள் இறுதி வரை தொடர்ந்து அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமல்லாது, ஆசிய பங்குச் சந்தைகளிலும் காலையில் இருந்து ஏற்றம் காணப்பட்டன. இத்துடன் அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவியது.இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 5 ஆயிரத்தை தாண்டியது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் 258.13 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,739.33 புள்ளிகளாக ஆக அதிகரித்தது.

ி.எஸ்.இ. 500- 118.54, சுமால் கேப் 221.47, மிட் கேப் 149.87 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 88.60 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5,037.00 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 199.40, சி.என்.எக்ஸ்.100- 81.60, சி.என்.எக்ஸ்.டிப்டி 70.95, சி.என்.எக்ஸ். 500- 71.85, சி.என்.எக்ஸ். மிட் கேப் 146.95, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 71.35, பாங்க் நிஃப்டி 260.40 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் சி.என்.எக்ஸ். ஐ.டி. 26.90 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 2,052 பங்குகளின் விலை அதிகரித்தது. 674 பங்குகளின் விலை குறைந்தது, 46 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் வங்கி பிரிவு 3.43%, தொழில்நுட்ப பிரிவு 0.88%, உலோக உற்பத்தி பிரிவு 3.78%, வாகன உற்பத்தி பிரிவு 0.85%, ரியல் எஸ்டேட் 0.48%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 2.07%, மின் உற்பத்தி பிரிவு 1.14%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.05% பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.93% அதிகரித்தன.

தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.03% குறைந்தது.

வியாழக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.4,044.04 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,446.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.050.23 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 1,110.10 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

Share this Story:

Follow Webdunia tamil