மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.145-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15 குறைந்தது.
மற்ற நாடுகளின் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தது. ஆனால் மும்பையில் தங்கம், வெள்ளி வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் டோக்கியோ சந்தையில் வெள்ளிக் கிழமையன்று தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 921.00/922.00 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 916.40/917.20 டாலர்.
அதே போல் வெள்ளியின் விலை 17.90/17.95 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 17.87/17.92 டாலர்.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,935
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,880
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,800