Publish Date: Sat, 19 Apr 2008 (18:59 IST)
Updated Date: Sat, 19 Apr 2008 (18:59 IST)
சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை முன்னிட்டு மும்பை சந்தையிலும் இன்று தங்கம், வெள்ளி விலைகளில் பெரும் சரிவு காணப்பட்டது.
ஆபரணத் தங்கம் 10 கிராமிற்கு ரூ.225 ம், சுத்தத் தங்கம் 10 கிராமிற்கு ரூ.230ம் சரிந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவிற்கு ரூ.245 குறைந்தது.
மும்பையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் வருமாறு:
ஆபரணத் தங்கம் 10 கிராம் ரூ.11,895 (ப.வி. ரூ.12,120)
ஆபரணத் தங்கம் 8 கிராம் ரூ.9,900 (ப.வி. ரூ.9,950)
சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.11,950 (ப.வி. ரூ. 12,180)
வெள்ளி ஒரு கிலோ ரூ.23,945 (ப.வி. ரூ.24,190)
வெள்ளி ஒரு கிராம் ரூ.23.90 (ப.வி. ரூ. 24.10)
நியூயார்க் சந்தையில் ஏற்பட்ட தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சிதான் மும்பையிலும் எதிரொலித்து உள்ளதாக வணிகர் ஒருவர் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Sat, 19 Apr 2008 (18:59 IST)
Updated Date: Sat, 19 Apr 2008 (18:59 IST)