Publish Date: Fri, 18 Apr 2008 (16:44 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 145-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35 குறைந்தது.
மற்ற நாடுகளின் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது. இதன் காரணமாக மும்பையிலும் அதிக அளவு தங்கம், வெள்ளி விற்பனைக்கு வந்ததால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நியுயார்க் சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 18.34 /18.39 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 18.23/18.28 டாலர்.
அதே போல் தங்கத்தின் விலை 940.90/941.70 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 938.90/939.70 டாலர்.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,275
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,225
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,335
Webdunia
Publish Date: Fri, 18 Apr 2008 (16:44 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)