Newsworld Finance Market 0804 17 1080417050_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்வு!

Advertiesment
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் நிஃப்டி சி.என்.எக்ஸ் மிட் கேப்
, வியாழன், 17 ஏப்ரல் 2008 (18:18 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள் இறுதி வரை தொடர்ந்து அதிகரித்தன. பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தாலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சீனா தவிர மற்ற எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் உயர்ந்து இருந்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் பங்குச் சநதைகளில் பாதகமான நிலை இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் 237.01 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,481.20 ஆக அதிகரித்தது.

ி.எஸ்.இ. 500- 112.46, சுமால் கேப் 180.22, மிட் கேப் 137.29 புள்ளி அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 71.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,958.40 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 232.15, சி.என்.எக்ஸ்.100- 66.90, சி.என்.எக்ஸ்.டிப்டி 65.45, சி.என்.எக்ஸ். 500- 68.15, சி.என்.எக்ஸ். மிட் கேப் 131.75, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 72.35, சி.என்.எக்ஸ். ஐ.டி.44.10, பாங்க் நிஃப்டி 213.15 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 2,025 பங்குகளின் விலை அதிகரித்தது. 703 பங்குகளின் விலை குறைந்தது, 51 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் தகவல் தொழில் நுட்ப பிரிவு 3.73%, வங்கி பிரிவு 3.13%, தொழில்நுட்ப பிரிவு 2.82%, உலோக உற்பத்தி பிரிவு 3.73%, வாகன உற்பத்தி பிரிவு 0.98%, ரியல் எஸ்டேட் 3.99%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.30%, மின் உற்பத்தி பிரிவு 1.14%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.70% அதிகரித்தன. பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.10% குறைந்தன.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,936.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,986.83 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.917.28 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 1,007.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

Share this Story:

Follow Webdunia tamil