Publish Date: Thu, 17 Apr 2008 (14:52 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 510-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.115 அதிகரித்தது.
மற்ற நாடுகளின் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தது. அத்துடன் வியாபாரிகள் அதிக அளவு வாங்குவதில் ஆர்வம் காட்டியதால் விலை அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 115 ட்லராக அதிகரித்தது. அத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததால், நியுயார்க், லண்டன் சந்தையில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
நியுயார்க் சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 18.34 /18.39 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 18.31/18.36 டாலர்.
அதே போல் தங்கத்தின் விலை 945.80/944 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 943.00/943.50 டாலராக குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,285
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,230
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,445
Webdunia
Publish Date: Thu, 17 Apr 2008 (14:52 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:17 IST)