மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 15 அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 குறைந்தது.
மொத்த வர்த்தகர்கள் தங்கத்தை அதிக அளவு விற்பனை செய்யதால், இதன் விலை குறைந்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்திய சந்தையில் வெள்ளியின் விலை குறைந்து, தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில், அந்நிய சந்தைகளில் இரண்டின் விலையும் குறைந்தது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து, நியுயார்க் சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது. நியுயார்க் சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.75/17.80 டாரலாக இருந்தது. நேற்றைய விலை 17.79/17.84 டாலர்.
அதே போல் தங்கத்தின் விலை 927.60/928.40 டாலரில் இருந்து, 926.20/927.00 டாலராக குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,085
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,030
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,785