காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,322.69 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 4941.70 ஆக இருந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இரண்டாவது நாளாக இன்று குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அமெரிக்காவில் சில வங்கிகளின் லாப கணக்கு அதிகரித்து இருப்பதாலும், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அமெரிக்க பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 232.10 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,385.70 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 63.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4943.35 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 129.01, பி.எஸ்.இ. 500- 105.06, சுமால் கேப் 164.61 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் 1535 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 260 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 30 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்தன. அமெரிக்கா உட்பட எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் இன்று சாதகமான போக்கு நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் சாதகமான போக்கு நிலவும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 60.41, எஸ்.அண்ட் பி 500-6.11, நாஸ்டாக் 10.22 புள்ளி அதிகரித்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 16.72, ஹாங்காங்கின் ஹாங்செங் 171.71, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 35.95, ஜப்பானின் நிக்கி 185.48, புள்ளி அதிகரித்து இருந்தது.
ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 180.31 புள்ளி குறைந்தது.