Newsworld Finance Market 0804 09 1080409002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்றம்

Advertiesment
பங்குச் சந்தைகளில் ஏற்றம்
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலுமகுறியீட்டஎண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 150 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 29 புள்ளிகள் குறைந்தது.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறைந்த குறியீட்டு எண்கள் சுமார் 10.20 மணியளவில் அதிகரிக்க துவங்கியது.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 91.55 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,679.17 ஆக இருந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 16.20 புள்ளிகளஅதிகரித்து குறியீட்டு எண் 4725.85 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 77.98, பி.எஸ்.இ. 500- 48.53, சுமால் கேப் 94.73 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1316 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 536 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 40 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 35.99, எஸ்.அண்ட் பி 7.00, நாஸ்டாக் 16.07 புள்ளி குறைந்து இருந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 18.85, ஹாங்காங்கின் ஹாங்செங் 209.87, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 24.71, ஜப்பானின் நிக்கி 233.67 சீனாவின் சாங்காய் காம்போசிட் 105.35 புள்ளி குறைந்து இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil