மும்பையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.15 அதிகரித்தது.
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், தங்கம், வெள்ளியின் விலையும் அதிகரித்தது.
சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 912.90/913.70 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை விலை 908.40/909.20. இதே போல் வெள்ளியின் விலை 17.82/17.87 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை இதன் விலை 17.77/17.82 டாலர்.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,900
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,845
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,765