Newsworld Finance Market 0804 07 1080407013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏ‌ற்ற‌ம்!

Advertiesment
சென்செக்ஸ் மும்பை  தேசிய பங்குச் சந்தை நிஃப்டி
, திங்கள், 7 ஏப்ரல் 2008 (11:03 IST)
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 50 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20 புள்ளிகளும் அதிகரித்தது.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தக‌ம் தொடங்கியதில் இருந்தே, எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்து வருகின்றன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 180.86 புள்ளி அதிகரித்து குறியீட்டஎண் 15,523.98 ஆக இருந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 53 புள்ளிகளஅதிகரித்து குறியீட்டு எண் 4,700 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 1.13, பி.எஸ்.இ. 500- 42.87 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் சுமால் கேப் 10.29 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 926 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 968 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 50 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 16.61 புள்ளி குறைந்து இருந்தது. ஆனால் நாஸ்டாக் 7.68 எஸ்.அண்ட் பி 1.09 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 10.01, சீனாவின் சாங்காய் காம்போசிட் 262.25, ஹாங்காங்கின் ஹாங்செங் 267.40 சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 0.79, ஜப்பானின் நிக்கி 134.59 புள்ளி அதிகரித்து இருந்தது.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் சென்ற வாரம் இருந்த மந்த நிலை மாறி, பங்குவிலைகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வெள்ளிக் கிழமை சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைந்தது.

பங்குகளின் விலைகள் குறைவாக இருப்பதால், முதலீட்டு நிறுவனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. அத்துடன் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவுகிறது. இதனால் இன்று இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பு இருக்காது என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil