Newsworld Finance Market 0804 03 1080403060_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை சென்செக்ஸ் 82 புள்ளி அதிகரிப்பு!

Advertiesment
மும்பை தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
, வியாழன், 3 ஏப்ரல் 2008 (18:18 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், இறுதிவரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட சென்செக்ஸ், நிஃப்டி சற்று அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 82.15 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,832.55 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 17.40 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 4771.60 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 71.85, மிட் கேப் 25.74 புள்ளிகள் குறைந்தன. பி.எஸ்.இ. 500- 14.51 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 6.15, பாங்க் நிஃப்டி 26.60 புள்ளி குறைந்தது. சி.என்.எக்ஸ். ஐ.டி.122.55, சி.என்.எக்ஸ்.100-13.90, சி.என்.எக்ஸ் 500- 4.80, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 04.00, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50-04.45 சி.என்.எக்ஸ். டிப்டி 12.50 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,215 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,409 பங்குகளின் விலை குறைந்தது, 63 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ரியல் எஸ்டேட் 0.30%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.3.31%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.1.97%, தொழில்நுட்ப பிரிவு 1.45%, உலோக உற்பத்தி பிரிவு 0.53% அதிகரித்தது.

வாகன உற்பத்தி பிரிவு 1.07%, வங்கி பிரிவு 0.02%,மின் உற்பத்தி பிரிவு 2.60%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.54%,நுகர்வோர் பொருட்கள் பிரிவு 2.10%, குறைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil