பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 97.41 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,847.81 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 35 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,789.20 ஆக இருந்தது.
முதலீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட பங்குகளை வாங்குவதில் மட்டும் ஆர்வம் காட்டுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃடி ஜூனியர்,வங்கி பிரிவு,மிட் கேப்,மிட்கேப் 50 ஆகிய பிரிவுகள் குறைந்தன. மற்றவைகளும் அடிக்கடி மாற்றத்தில் உள்ளது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இன்று குறியீட்டு எண்கள் ஒரே நிலையாக இல்லாமல் அதிக மாற்றத்துடன் உள்ளன.
காலை 10.50 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 4.45 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,754.85 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 3.30 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,757.55 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 42.49, பி.எஸ்.இ.500-14.57 சுமால் கேப் 51.48 புள்ளிகள் குறைந்தன. அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் 931 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1091 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 46 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 48.53, நாஸ்டாக் 01.35, எஸ் அண்ட் பி 500-02.65 புள்ளிகள் குறைந்தது.
ஆனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 16.06, சீனாவின் சாங்காய் காம்போசிட் 48.82. சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 30.67, ஜப்பானின் நிக்கி 123.76, ஹாங்காங்கின் ஹாங்செங் 297.06 புள்ளிகள் உயர்ந்து இருந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் திங்கட் கிழமையுடன் ஒப்பிடுகையில் நேற்று சிறிது குறைந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் நேற்று அதிகரித்தது. இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து உள்ளது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று எல்லா பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது. இன்று முதலீட்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் விலை அதிகரித்த பங்குகளை விற்பனை செய்து இலாப கணக்கை பார்ப்பார்கள். இதனால் இரண்டு பங்குச் சந்தைகளிலும் அடிக்கடி மாற்றம் இருக்கும்.