Newsworld Finance Market 0804 02 1080402038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை: தங்கம் விலை 2 நாளில் ரூ.475 சரிவு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி சந்தை
, புதன், 2 ஏப்ரல் 2008 (15:25 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் தங்கத்தினவிலை 10 கிராமிற்கு நேற்று ரூ.275 குறைந்த நிலையில், இன்று மேலும் ரூ.200 சரிந்துள்ளது. இதன்படி, இரண்டு நாளில் தங்கத்தின் விலை ரூ.475 குறைந்துள்ளது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,020 குறைந்திருந்த நிலையில், இன்று ரூ.30 அதிகரித்துள்ளது.

நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவது குறைவாக இருந்ததால், இதன் விலைகள் குறைந்தன. அதே நேரத்தில் தொழில் துறையினர் வெள்ளி வாங்க ஆர்வம் காண்பித்ததால் விலை சிறிது அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் சந்தையில் அவுன்ஸ் 884.20/885.40 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 887.10/887.90 டாலராகவும், அவுன்ஸ் 16.81/16.86 டாலராக இருந்த வெள்ளியின் விலை 16.88/16.89 டாலராகவும் உயர்ந்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,545
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,485
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.22,670

Share this Story:

Follow Webdunia tamil