Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
, செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (11:47 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டபங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் அதற்கு பிறகு எல்லா பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தும், குறைந்தும் ஒரு நிலையில்லாத போக்கு தொடர்கிறது.

நேற்று பங்கு விலைகள் கடுமையாக குறைந்தது. இதனால் இன்று காலை பங்குகளை வாங்கினார்கள். இதனால் விலைகள் அதிகரித்தன. ஆனால் இருப்பில் உள்ள பங்குகளை விற்பனை செய்துவிட்டு, வேறு பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவதால் பல்வேறு பிரிவுகளில் உள்ள பங்குகளின் விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கின்றது. இதே போக்கு இன்று முழுவதும் தொடரும் என தெரிகிறது. இன்று இந்த நிதி ஆண்டின் முதல் நாள் என்பதும் கவனிக்கத்தக்கது.

காலை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 183 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. இதே போல் நிஃப்டி 66.25 புள்ளிகள் அதிகரித்தது. இதற்கு காரணம் ஏ.சி.சி, பி.ஹெச்.இ.எல், சிப்லா, டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவு வாங்கியதால், இதன் விலைகள் அதகரித்து குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

காலை 11.05 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 5.36 புள்ளிகளஅதிகரித்து குறியீட்டஎண் 15,649.80 ஆக இருந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 8.05 புள்ளிகளஅதிகரித்து குறியீட்டு எண் 4726.45 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 18.07, பி.எஸ்.இ.500-14.35, சுமால் கேப் 54 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிபங்குசசந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 1,447 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 790 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 57 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 46.49, நாஸ்டாக் 17.92 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்களும் சரிந்து இருந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 3.73, சீனாவின் சாங்காய் காம்போசிட் 362.70 புள்ளிகள் குறைந்து இருந்தன.

ஆனால் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 22.42, ஜப்பானின் நிக்கி 124.14, ஹாங்காங்கினஹாங்செங் 299.95 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

அமெரிக்க பஙகுச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்துள்ள நிலையில் , சில ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் சரிந்து உள்ளன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று ஏற்றமாகவே இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil