சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 115ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.80ம், பார் வெள்ளியின் விலை ரூ.185-ம் குறைந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஓரளவு குறைந்துள்ளது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,300 (நேற்று ரூ.12,415)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,120 (9,200)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,140 (1,150)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,360 (24,545)
வெள்ளி 10 கிராம் ரூ.260.50 (262.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26.50