Publish Date: Thu, 27 Mar 2008 (20:26 IST)
Updated Date: Thu, 27 Mar 2008 (20:09 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் இன்றைய இறுதி நிலவரப்படி, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.585ம், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.45ம் அதிகரித்துள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.12,435 ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை மாலையில் ரூ.12,385 ஆக குறைந்தது. எனினும், நேற்றைய சந்தை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் ரூ.40 அதிகரித்துள்ளது.
லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 951.50/952.60 டாலரகவும், வெள்ளியின் விலை அவுன்ஸ் 18.32/18.33 டாலராக உள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி விலை விபரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.12,385 (நேற்று ரூ.12,345)
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.12,330 (12,285)
வெள்ளி (பார்) ஒரு கிலோ: ரூ.23,875 (23,575)