Publish Date: Tue, 25 Mar 2008 (20:21 IST)
Updated Date: Tue, 25 Mar 2008 (20:21 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.110ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.325ம் அதிகரித்துள்ளது. புதிய தேவையின் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மும்பைச் சந்தையில் இன்று காலை 24 காரட் தங்கத்தின் விலை ரூ.12,090க்கு துவங்கிய நிலையில், மாலை சந்தை முடியும்போது, ரூ.12,175 ஆகவும், 10 கிராமிற்கு ரூ.12,030க்கு துவங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை மாலை ரூ.12,115 ஆகவும் அதிகரித்தது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இறுதி விலை விபரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.12,175 (நேற்று ரூ.12,065)
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.12,115 (12,005)
வெள்ளி (பார்) ஒரு கிலோ: ரூ.22,990 (22,665)