மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.1,200ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,385ம் சரிந்துள்ளது.
சந்தையின் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.105ம், வெள்ளியின் விலை ரூ.10ம் குறைந்துள்ளது. மிகுந்த விற்பனை அழுத்தத்தால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
மும்பைச் சந்தையில் இன்று காலை 24 காரட் தங்கத்தின் விலை ரூ.11 ஆயிரத்து 970க்கு துவங்கிய நிலையில், விலை சற்று அதிகரித்து மாலை சந்தை முடியும்போது, ரூ.12 ஆயிரத்து 65 ஆக இருந்தது. ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை 920 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இறுது விலை விபரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.12,065 (முன்பு ரூ.12,170)
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.12,005 (12,110)
வெள்ளி (பார்) ஒரு கிலோ: ரூ.22,665 (22,675)