Publish Date: Sat, 22 Mar 2008 (13:11 IST)
Updated Date: Sat, 22 Mar 2008 (13:11 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.150 குறைந்தது. கடந்த இரண்டு நாட்களில் கடலை எண்ணெய் விலை குவின்டாலுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைத்துள்ளது. இதனால் அடுத்த வாரங்களில் எண்ணெய் விலை மேலும் குறையும் என்று தெரிகிறது.
இன்று காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,450
கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.6,750
விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.6,700
நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,167
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,100
கடலை பயறு 80 கிலோ ரூ.2,250-2,300
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.900