Newsworld Finance Market 0803 18 1080318010_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி தேசிய பங்குச் சந்தை மும்பை பங்குச் சந்தை
, செவ்வாய், 18 மார்ச் 2008 (11:21 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது (9.45 மணியளவில்) சென்செக்ஸ் 100 புள்ளியும், நிஃப்டி 28 புள்ளியும் குறைந்து இருந்தன.

ஆனால் பத்தாவது நிமிடத்திலேயே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் தொடர்ந்து உயர தொடங்கின.

காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 113.57 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,923.06 ஆக அதிகரித்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 49.45 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4552.55 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 1.81, சுமால் கேப் 25.20 புள்ளி குறைந்து இருந்தது. ஆனால் பி.எஸ்.இ.500-37.41 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி, நிஃப்டி ஜீனியர் தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 21.16 புள்ளி அதிகரித்தது. அதே நேரத்தில் நாஸ்டாக் 35.48, எஸ் அண்ட் பி 11.54 புள்ளிகள் குறைந்து இருந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 5.19, ஜப்பானின் நிக்கி 78.70 புள்ளிகள் அதிகரித்து இருந்தன. சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 14.62, ஹாங்காங்கின் ஹாங்செங் 244.27, சீனாவின் சாங்காய் காம்போசிட் 233.03, புள்ளிகள் குறைந்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்கு சந்தைகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், சில பங்குச் சந்தைகளில் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்து இருக்கின்றது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்படும் மாற்றங்களை வைத்தே, இந்திய பங்குச் சந்தையின் இன்றைய போக்கு இருக்கும்.

காலையில் அதிகரித்த பங்கு விலைகளும், குறியீட்டு எண்களும் அடிக்கடி மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.30 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.30 மணியளவில் வர்த்தகம் தொடங்கி மாலை 4.15 வரை நடைபெறும்.

Share this Story:

Follow Webdunia tamil