மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.545-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.385-ம் அதிகரித்தது.
டோக்கியோ சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,021.40 டாலராக அதிகரித்தது. இதே போல் வெள்ளியின் விலை அவுன்ஸ் 21.02 டாலராக அதிகரித்து.
பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடியால், எல்லா நாடுகளிலும் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை ஆசிய சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு 1 பீப்பாய் 111 டாலராக அதிகரித்தது.
இதனால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது.
மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.13,555
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.13,495
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.25,770